சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் தொடர்பில் வெளியானமுக்கிய அறிவிப்பு!



நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாகக்  கல்வியமைச்சுக்கு  சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் கடந்த 31ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவான டெங்கு நோயாளர்களில்  அதிகளவானோர்  5 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களாகும்  எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


இது தொடர்பாக விசேட அறிக்கையொன்றினையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை