மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் - மதிமேனன் பதவியேற்பு!




மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் - மதிமேனன் பதவியேற்பு!
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தவிசாளராக விமலநாதன்-மதிமேனன் அவர்கள் இன்று திங்கட்கிழமை(02-06-2025)ஆம் திகதி காலை சுபவேளையில் பதவியேற்றார்.

இவர் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான உள்ளுராட்சி தேர்தலில் மண்டூர் வட்டாரத்தில் போட்டியிட்டு 1101 வாக்குகளை பெற்றுள்ளார்.

இவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணாக்கியினின் செயலாளராகவும் கடமையாற்றினார்.பல சமூகசேவைகள் முன்னெடுத்து மக்கள் நேசிக்கும் பண்பாளராகவும் திகழ்ந்தார்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும்,மக்கள் நலன்சார்ந்த போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பல பங்களிப்புக்களை செய்து மக்களின் மனதில் இடம்பிடித்தவர்.

போரதீவுப்பற்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சியினர் போட்டியிட்டு 50 வீதமான வாக்குகளைப்பெற்று தனித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன் தவிசாளராக வி.மதிமேனனும்,துணை தவிசாளராக பாலையட்டிவட்டை வட்டாரத்தில் தெரிவான தங்கராசா-கஜசீலன் தெரிவு செய்யப்பட்டு வர்த்தமானி நேற்றையதினம் வெளியிடப்பட்டிருந்தது.இதற்கு அமைவாக இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்றார்கள்.





இப்பதவியேற்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன், இரா.சணாக்கியன்,வைத்தியர் இ.ஶ்ரீநாத் ,தமிழரசுக்கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள்,பிரதேச சபைச்செயலாளர் எஸ்.பகீரதன் ஆகியோர்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை