நாட்டின் முன்னணி அரச வணிக வங்கியான இலங்கை வங்கியின் (BOC) பணிப்பாளர் சபை, அதன் ஒரு பங்குடமையாளரான திறைசேரிக்கு ஐந்து பில்லியன் ரூபாய் இலாபத்தை தமது பங்களிப்பாக வழங்குவதற்கு அனுமதி அளித்தது.
இப்பங்களிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நேற்று முன்தினம் (03-07-2025) நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும விடம் கையளிக்கப் பட்டது.
