ஜூலை 18 அன்று தெஹிவளை புகையிரத நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், இன்று (25-07-2025) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடனான (STF) துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சந்தேகநபர் பதுங்கியிருந்த இடம் குறித்த தகவலின் பேரில், அதிரடிப்படை குழுவினர் இன்று(25-07-2025) அதிகாலை 4:30 மணியளவில் கஹதுடுவவின் பலகம, கடெல்லாவிட்ட பகுதியிலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் சோதனை நடத்தினர். அதிகாரிகள் நெருங்கியபோது, சந்தேகநபர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிரடிப்படையினர் திருப்பிச் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் சந்தேகநபர் பலத்த காயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.
இந்த மோதலின் போது ஒரு அதிரடிப்படை அதிகாரியும் காயமடைந்தார். அவர் தற்போது களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேகநபரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பாணந்துறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.