இந்தியாவில் கைதான இலங்கையர்!




சென்னை - செங்குன்றம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறப்படும் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர்.


அதன்போது, உரிய ஆவணங்களின்றி இந்தியாவுக்குள் குறித்த நபர் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விசாரணைகளின் பின்னர் அவரை இலங்கைக்கு நாடுகடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை