தேர்த் திருவிழாவில் கலசம் கழண்டு விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!



முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்றைய தினம் (04-07-2025)ஆம் திகதி  இடம்பெற்றுள்ளது.

தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததாக தெரியவந்துள்ளது.




கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை