இந்தச் சம்பவம் இன்று (03-07-2025)ஆம் திகதி மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதான வீதி பஸ் டிப்போவுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து வந்த லொறியுடன் எதிரே வந்த டிப்பர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், லொறி சாரதி காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டிப்பரை செலுத்தி வந்த சாரதி விபத்து நடந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.



