பிள்ளையானின் 50 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகளும் இரத்ததான நிகழ்வும்!

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (18.08.2025)ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு பனிச்சங்கேணி ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலயத்தில் 50 பானை பொங்கலுடன் பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்ததோடு அன்னதான நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மேலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்யும் வகையில் கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் எமது கட்சியின் ஆதரவாளர்களால் குருதிக்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவது வழமையாகும்.

அந்த வகையில் இவ் வருடமும் “ உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உட்பட கிழக்கு தமிழர் அரசியல் நலன் விரும்பிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கியிருந்தனர்.
புதியது பழையவை