தீ விபத்தில் வியாபார நிலையம் தீக்கிரை!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை போப்பிட்டிய நகரில்  சில்லறை வியாபார நிலையமொன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.    

பிரதேச மக்கள், பொலிஸார் இணைந்து தீயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 

எனினும், கடைக்குள் இருந்த பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. கடையும் முழுமையாக சேதமடைந்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. விசாரணைகள் தொடர்கின்றன.
புதியது பழையவை