12 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கொழும்பில் தீ விபத்து கட்டுக்குள் வந்தது.!

கொழும்பில் உள்ள புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் நேற்றிரவு (20.09.2025) ஏற்பட்ட தீ விபத்து, 12 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இன்று(21.09.2025) காலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

​தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நேற்று மாலை 4.05 மணியளவில் நான்காவது மாடியில் உள்ள ஒரு மின்சாதன மற்றும் கைபேசி கடையில் தீ பரவியதாகவும், பின்னர் அருகிலுள்ள கட்டிடம் வரை தீ பரவியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

​தீயைக் கட்டுக்குள் கொண்டுவர 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், ஒரு விமானப்படை பெல் 212 ஹெலிகாப்டர், பொலிஸ், கடற்படை, விமானப்படை மற்றும் துறைமுக தீயணைப்புப் படையினர் பயன்படுத்தப்பட்டனர்.

​இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த பல குழுக்களை பொலிஸார் நியமித்துள்ளனர். இன்று அரசாங்க ஆய்வாளர் மற்றும் நீதவான் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

​இதற்கிடையில், பதில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வத்தகல, தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு குழு நியமிக்கப்படும் என்று கூறினார். அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புறக்கோட்டையில் கட்டுமான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
புதியது பழையவை