கொழும்பில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்ற தாய்

தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம் 31 வயது இலங்கைத் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் .

இவர் மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேராசிரியர் டிரான் டயஸின் பராமரிப்பில், நேற்று அதிகாலை 12:16 முதல் 12:18 வரை இரண்டு நிமிடங்களுக்குள் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன.

தாய் மற்றும் பிறந்த ஆறு குழந்தைகளும் நல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை