மட்டக்களப்பு களுதாவளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கார்.!


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் இன்று (30.09.2025)பிற்பகல் 12. 30 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இந்த விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியூடாக பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மின்சாரத் தூணுடன்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நடைபெற்ற சமயம் காரில் இருவர் பயணித்துள்ள நிலையில் தெய்வாதீனமாக  இருவருக்கும் எவ்வித காயம் ஏற்றபடவில்லை காரின் முன் பகுதி சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை