ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 24.09.2025(புதன்கிழமை) நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 வது அமர்வில் உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி, செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறும் பொது விவாதத்தின் பிற்பகல் அமர்வில் ஜனாதிபதி உரையாற்றுவார்.
அரச தலைவராக தனது முதல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை உரையில், அனுரகுமார திஸாநாயக்க இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகள் மற்றும் காலநிலை நடவடிக்கை, நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 பொது விவாதத்தில் அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தலைவர் வகுத்த கருப்பொருளின் கீழ் அறிக்கைகளை வழங்குவார்கள்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அனுரகுமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இலங்கை, உலக அமைப்பில் ஆற்றும் முதல் உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.