இன்றயதினம்(27.09.2025) வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளால் உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது இப்பபோராட்டமானது செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை
வேண்டியும் வலிந்துகாணாமல்
ஆக்கப்பட்டோருக்கு
நீதிகோரியும் யாழ் செம்மணியிலும் அம்பாறை தம்பிலிவில் மத்திய
சந்தை பகுதியிலும் சுலற்சி முறையிலான
அம்பாறை மாவட்ட
வலிந்து காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி
தம்பிராசா செல்வராணி கூறுகையில் 17 வருடம் ஆகியும்தங்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்றும் இலங்கையில் பல
ஜனாதிபதிகள் மாறியும் நீதி தருவதாக இல்லை என்றும் இதுவரை கிடைக்காத நீதி இனியும் கிடைக்கப்போவது
இல்லை என்றும் இதனாலே சர்வதேசத்திடம் நீதி
கேட்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் செல்வராணி
அம்மா கூறுகையில்
நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐனா 60வது கூட்டத்தொடருக்கு வரும் அனைத்து உலக. நாடுகளின் பிரதிநிதிகள் எங்களுடைய போராட்டத்தை கண்கூர்ந்து பார்த்து
செம்மணிமனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை
யும் நீதியும் வேண்டி
நிற்பதாகவும் கூறியுள்ளார்.