இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழரசு கட்சியினர்!!

இலங்கைத் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் (23.09.2025) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வை சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பானது, கொழும்பில் உள்ள இந்தியத் உயர்ஸ்தானிகரின் இல்லமான 'இந்தியா ஹவுஸில்' இடம்பெற்றுள்ளது.

இதில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், வைத்தியர் ப.சத்தியலிங்கம், ச.குகதாசன், து.ரவிகரன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விபத்தில் சிக்கிக் காயமடைந்த ஞா.ஸ்ரீநேசனும், வெளிநாட்டுக்குச் சென்றுள்ள க.கோடீஸ்வரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்ததால், சுமந்திரனுக்கு இச்சந்திப்பில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
புதியது பழையவை