'பெக்கோ சமன்' - 2 சொகுசு பேருந்துகள் பறிமுதல் - விசாரணையில் காவல்துறை..!

நெடுங்கொட நிர்மலா பிரசன்னா, "பேக்கோ சமன்" என்று அறியப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு சொகுசுப் பேருந்துகளைப் பொலிஸார் அண்மையில் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஒன்று, "பெக்கோ சமன்" கைது செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த இரண்டு பேருந்துகளும் வேறொரு நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கைப் பாதாள உலகக் குழு உறுப்பினர்களில் "பெக்கோ சமனும்" ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவரது சட்டவிரோதச் சொத்துக்கள் மற்றும் தொடர்புகள் குறித்துப் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதியது பழையவை