யாழ் தேவியுடன் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதத்துடன் கிளிநொச்சி - பளை இத்தாவில் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்று மோதுண்டதில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (13.10.2025)மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பளை - வண்ணாங்கேணி வடக்கு பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
புதியது பழையவை