மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் விபத்துக்குள்ளான கார்.!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்ப குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த காரே குருக்கள்மடம் முருகன் ஆயத்திற்கு முன்னால் இன்று (14.10.2025) அதிகாலை  3 மணியளவில் விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. விபத்து சம்பவிக்கும்போது காரில் மூன்றுபேர் பயணித்துள்ள நிலையில் ஒருவருக்கு காலில் உடைவு ஏற்பட்டதுடன் மற்றவர்களுக்கும் சிறு காயம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.
புதியது பழையவை