மாணிக்கப்போடி சின்னத்தங்கச்சி தம்பதியினரின் மைந்தனிவர்
மகிழவட்டவானில் பிறந்தவர்
மகிமையுறு வந்தாறுமூலையில் மனமொக்க ராதாவை மணந்தவர்
சிரசாசனக்கலை தன்னை இவர்
செம்மையாய் சிறப்பாய் செய்து
உலக சாதனையை வென்றார்
ஒப்பற்ற புகழினைப் பெற்றார்.
ஐந்து மணித்தியாலங்கள் அத்தோடு
ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து செய்து
அகில சாதனை 3 மணி 3 நிமிடங்களை
முறியடித்தார் முதன்மை நாயகனானார்
ஓய்வுநிலை உபதபாலதிபராய் இருந்தார்
ஒப்பற்ற சாதனைக்கு உரித்தானார்
சாய்வு நாற்காலி தேடும் அறுபதிலிவர்
சரித்திரத்தில் தனக்கான இடம் பிடித்தார்
சிவானந்தாவில் கற்றுச் செம்மையானவர்
செல்நெறிகள் புரிந்த சிறப்பாளன்
அவாவுற்றுப் பயின்ற யோகக்கலையினால்
அறிமுகமாகி விட்டார் அகிலவுலகுக்கு
மட்டக்களப்புக்கு மட்டுமல்லாமல் தாய்
மண்ணுக்கும் தன் தாய்நாட்டுக்கும்
மட்டற்ற சாதனையால் மனித திலகமானார்
மனம் நிறைந்த வாழ்த்துகளைப் பதிவோம்
சோழன் உலகசாதனைப் புத்தக நிறுவன
சொந்ததத் தமிழ் உறவுகள் அளித்த
நாளும் போற்றவல்ல நல்லகளத்திற்கும்
நடுவர் நாயகங்களுக்கும் நன்றிகள்
'சாதனை படைப்போம் சரித்திரர் ஆவோம்
வேதனை கடப்போம் வெற்றியர் ஆவோம்"





