மட்டக்களப்பில் சிறுமி துஷ் பிரயோகம்- சிறுவன் கைது.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை இன்று (16.10.2025) ஆம் திகதி அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ தினமான இன்றைய தினம் அதிகாலை சிறுமி வீட்டின் அறையில் இருந்து காணாமல் போயுள்ளார்.

சிறுமியை தேடிய பெற்றோர் வீதியில் இளைஞன் ஒருவருடன் இருப்பதை கண்டு இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவனை கைது செய்ததுடன், குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை