சுன்னாகம் ஸ்கந்தவரோதயாவின் பழைய மாணவன் மணோகரன் கோணேஸ்வரன் சவாகச்சேரி தலைமைப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இலங்கைப் பொலிஸ்சேவையில் 35வருடங்களை பூர்த்தி செய்தவராக காணப்படுகின்றார். வடக்கு மாகாணத்தில் தமிழ் பேசுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் அதனால் பொதுமக்கள் தமது பிரச்சனைகளை தெளிவுபடுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது.
முறைப்பாடுகளை எழுதும் போது தவறு ஏற்படுகின்றது,நாம் கூறுவது ஒன்று அவர்கள் எழுதுவது ஒன்றாக உள்ளது என்றெல்லாம் கடந்த காலங்களில் விமர்சனம் செய்தார்கள்.
அத்தனையையும் தாண்டி இன்று வடக்கில் ஒரு பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக ஒரு தமிழ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.