குறைவடையும் முட்டை விலை வெளியான அறிவிப்பு.!

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாட்டில் முட்டை விலை குறைப்பதற்கான முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

சங்கத் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்துள்ளார் போல, உற்பத்தி செலவுகள் குறைந்ததையும் சந்தை நிலைமை சீராகி வருவதையும் கருத்தில் கொண்டு, முட்டையின் விலை ரூ.10 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, இனி வெள்ளை முட்டை ஒன்றின் விலை ரூ.18 ஆகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை ரூ.20 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

மேலும், அரசு வரி கொள்கைகள் மற்றும் தீவன விலை சீரமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டால், எதிர்காலத்தில் விலையை மேலும் குறைக்கும் வாய்ப்பும் உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் உடனடியாக அமலுக்கு வரும் எனவும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதற்கமைய விற்பனை நடைபெறும் எனவும் அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
புதியது பழையவை