பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலய வீரகம்பம் வெட்டும் நிகழ்வு.!

மட்டக்களப்பு மாவட்டம் பெரியபோரதீவு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மனின் சக்தி விழாவின் முக்கிய நிகழ்வான தீக்குழிக்கு நடப்படும் வீரகம்பம் வெட்டும் நிகழ்வு இன்று(05.10.2025)ஆம் திகதி பக்திபூர்வமாக  இடம் பெற்றது .

பெரியபோரதீவு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அம்பாள் பழுகாமம் ஊடாக திக்கோடை கிராமத்தை அடைந்து அங்கே வீரகம்பம் வெட்டும் வைபவம் இன்று (05.10.2025) ஆம் திகதி மிகவும் பக்திபூர்வமாக இடம் பெற்றன. 

மாலை வாழைக்காய் எழுந்தருளல் செய்யும் நிகழ்வும் நடைபெற்றதுடன் 
(07.10.2025  )ஆம் திகதி   பகல் சக்தி மகாயாகமும் நோர்ப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்று மாலை கங்கை நீராடல் நிகழ்வு நடைபெறும்.

அன்னைக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து  தீ மூட்டும்  நிகழ்வு நடைபெறும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ (08.10.2025)ஆம் திகதி காலை 8.00மணிக்கு  தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்று நண்பகல் 12.00மணிக்கு வாழி பாடுதல் கொடியிறக்கம் என்பன நிகழ்வுகள் இடம்பெற்று இவ்வாண்டு சக்திப் பெரு விழா இனிதே நிறைவுபெறும்.
புதியது பழையவை