திருகோணமலை – மடத்தடி சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19.10.2025) பட்டா ரக வாகனம் ஒன்று உந்துருளியில் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.
மடத்தடி சுற்றுவட்டத்தின் ஊடாக திருஞானசம்பந்தர் வீதிக்கு செல்ல முற்பட்ட உந்துருளி மீது பிரதான வீதியின் ஊடாக மடத்தடி சந்தியை நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தூரம் உந்துருளி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.