மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நேற்று வெள்ளிக்கிழமை (10.10.2025)
காலை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய அதிகாரி R.M. Kapila Bandara அவர்களின் பணிப்புரையின்படி, சட்டத்திற்கு முரணாக சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களை குறிவைத்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, கல்முனையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற ஒரு பஸ் வண்டி சோதனைக்குட்படுத்தப்பட்டது.
அந்த வண்டி மண்ணெண்ணையை (kerosene) எரிபொருளாக பயன்படுத்தியிருந்தது என்ற சந்தேகத்தின் பேரில், சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த அதிரடி நடவடிக்கை பின்வரும் பொலிஸ் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டது:
1. P.S 34407 Karasingha
2. P.S 70364 Pathum
3. P.C 90926 Asela