பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரு விழாவின் தீ மிதிப்பு.!

கிழக்கின்  புகழ்பெற்ற திரௌபதை அம்மன் ஆலயமாகவும் வரலாற்றுத் தொன்மை மிக்க ஆலயமாகவும் மிளிரும்  அம்பாறை மாவட்டம் கல்முனை பாண்டிருப்பு  அருள்மிகு திரௌபதை அம்மனின்  வருடாந்த உற்சவம் கடந்த (23.09.2025)ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில் நேற்று(10.10.2025)ஆம் திகதி தீ மிதிப்பு இடம் பெற்றது.


கடந்த மாதம் (23.09.2025)ஆம் திகதி ஆலயத்தின் திருக்கதவு  திறத்தலுடன் திருக் கொடியேற்றலும் இடம்பெற்று சுவாமி எழுந்தருளல் நாட்கால் வெட்டுதல், வாள் மாற்றுதல் வனவாசம், அஞ்சான வாசம், அருச்சுனர் பாசுபதம் பெறத் தவம் செய்தல், அரவாணைக் களப்பலியிடலும் இடம்பெற்று, வீர கும்பம் நிறுத்தி தீ மூட்டி,  மஞ்சள் குளித்து பக்தி பரசவத்துடன் பஞ்ச பாண்டவர்கள் தீ மிதித்தல் கிரியையை நிறைவேற்றினர்.

இன்று(11.10.2025)சனிக்கிழமை பிற்பகல் தருமருக்கு முடி சூட்டி பாற்பள்ளயத்துடன் கல்முனை,  பாண்டிருப்பு ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரு விழா கிரியைகள் யாவும் நிறைவுபெறவுள்ளன.
புதியது பழையவை