அலங்கார மின்னொளி வளைவு மட்டக்களப்பில் திறந்து வைப்பு.!

தீபத் திருநாளாம் தீபாவளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் புதிய கல்லடி பாலத்தில் அமைக்கப்பட்ட அலங்கார மின்னொளி வளைவு நேற்று(19.10.2025)இரவு திறந்து வைக்கப்பட்டது.

இந்துக்களின் தீபத் திருநாளாம் தீபாவளி கொண்டாப்படும் நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் இந்த அலங்கார மின்னொளி வளைவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகரசபை பிரதி முதல்வர் டினேஸ், மாநகரசபை ஆணையாளர் என்.தனஞ்செயன், மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.

மின்னொளி அலங்கார வளைவு திறக்கப்பட்டதை தொடர்ந்து வான வேடிக்கைகளும் நடைபெற்றது.

நிகழ்வின் போது தீபத்திருநாள் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டதுடன் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு இதனை பார்வையிட்டு வருகின்றனர்
புதியது பழையவை