களுத்துறை – பலாத்தொட்ட பகுதியில் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இன்று சனிக்கிழமை (11.10.2025) மாலை பதிவாகியுள்ளது.
உந்துருளியில் பிரவேசித்த இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.