நீதி மன்றுக்கு அனுப்பட்ட தகவல் அறியும் கோரிக்கை தகவல் அறியும் அலுவலர் இல்லை என ஏற்க மறுத்த நீதிமன்றம்.!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீதவான் நீதிமன்றக்கு  தகவல் அறியும்உரிமைச்சட்டத்திற்கு அமைவாக கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர்
தகவல் கோரி விண்ணப்பத்தை பதிவு தபாலில் அனுப்பியுள்ளார். குறித்த தகவல்
அறியும் கோரிக்கை விண்ணப்பத்தில்

கிளிநொச்சி மாவட்டத்தில் . 2024 மற்றும் 2025 முதல் அரையாண்டு வரையான காலப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் எத்தனை வழக்குகள்
எடுத்துக்கொள்ளப்பட்டன?  இந்த வழக்குகளில் எத்தனை ரிப்பர் மணல் மற்றும்
எத்தனை உழவு இயந்திர மணல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டன? இந்த மணல்கள் எவ்வளவு தொகைக்கு ஏல விற்பனை செய்யப்பட்டன? அந்த பணம் என்ன செய்யப்பட்டது? பகிரங்க ஏல விற்பனையின் போது மணல்களை பெற்றுக்கொண்டவர்கள்
யார்? அவர்களது விபரங்கள்? போன்ற தகவல்கள் கோரப்பட்டு 02.10.2025  ஆம்
திகதியில் விண்ணப்பிக்கப்பட்டன.

ஆனால்  தங்களுடை நீதிமன்றில் குறிப்பிட்ட பதவி நிலை ஆதாவது  தகவல் அறியும் அலுவலர் இல்லை என தெரிவித்து பதிவாளர் தகவல் அறியும்
விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வில்லை என தபால் உறையில் குறிப்பிட்டு தபால் ஊழியர்  கோரிக்கை அடங்கிய தபாலினை மீளவும் கோரிக்கையாளரிடம்
ஒப்படைத்துள்ளார்.

 எனது சந்தேகம் என்னவெனில் இலங்கையின் நீதி மன்றங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலகளிக்கப்பட்ட நிறுவனங்களா?  சட்ட நிபுணத்துவம் வாய்ந்தவர்களிடம் இருந்து  பதிலை எதிர்பார்க்கின்றேன்.
புதியது பழையவை