இந்தியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயது வீரன் தங்க பதக்கம்.!

இந்தியாவில் இடம்பெற்ற 23 வது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயது வீரன் தங்க பதக்கம் ஒன்றினையும் , இரண்டு வெள்ளி பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

இந்தியாவில் கடந்த 5ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையில் நடைபெற்ற போட்டிகளில் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவனான செல்வராஜா ரமணன் , 50 வயது பிரிவில் பங்குபற்றி உயரம் பாய்தலில் தங்கபதக்கமும், முப்பாச்சல் மற்றும் கோலூன்றிப்பாய்தலில் வெள்ளி பதக்கங்களையும் பெற்று சாதனைபடைத்துள்ளார் .

குறித்த போட்டியில் 22 ஆசிய நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீர்கள் பங்கு பற்றியிருந்தனர் அதில் இலங்கையில் இருந்து 250 வீர வீராங்கனைகள் பங்கு பற்றியிருந்தனர் .

இந்நிலையில் 50 வயது யாழ்ப்பாண வீரன் தங்க பதக்கம் பெற்றமைக்கு பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.
புதியது பழையவை