கம்பளை - கண்டி பிரதான வீதியில் கெலிஓயா, சரமட விகாரைக்கு அருகில் இன்று(12.11.2025)ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது.
நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடைமீது மோதியுள்ளது.
அத்துடன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவொன்றையும் மோதி தள்ளி முன்சென்று, வீடொன்றின் மதில்மீது மோதி நின்றுள்ளது.
விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.