அம்பாரையில் கஞ்சா வியாபாரி கைது.!

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் 110 கிராம் கேரள கஞ்சாவுடன் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவர் நேற்று (10.11.2025) கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமானா சுனில் திசாநாயக்கவின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ஆப்தீன் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகாஷ் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பிரபல கஞ்சா வியாபாரி  கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை