மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரியங்கட்டு பகுதியில் வீடொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று திங்கட்கிழமை (17.11.2025)ஆம் திகதி மாலை இச்சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தட்டுமுனை பகுதியைச்சேர்ந்த 22 வயதுடையவர் எனத்தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவருக்கும் அவரது கணவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், கணவர் மின்விசிறி கம்பியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நீதவான் விசாரணைக்குப்பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து உயிரிழந்தவரின் கணவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
25 வயதான குறித்த நபர், பொலிஸாரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.