தொல்லியல் திணைக்கள அறிவிப்பு பலகை விவகாரம் - கொக்கட்டிச்சோலை பொலிசாரால் மூன்று பேர் கைது.!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிசாரால் நேற்று (25.11.2025)இரவு  தாந்தாமலை வட்டார இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் பிரதேசபை ஊழியர் ஆகிய மூவர் தாந்தாமலையில் வைக்கப்பட்ட தொல்லியல் திணைக்களத்தின் பதாகையினை அகற்றியது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சட்டத்தரணி மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சகிதம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்ததாகவும்
அவர்களிடம் பொலிசார் தம்மிடம் கண்கண்ட சாட்சிகள் உள்ளதாகவும் இன்று(26.11.2025) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்த நிலையில்  தாம் இன்றைப் போல நாளையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாகவும் மட்டக்களப்பு முன்னாள் நகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்திருக்கிறார்.
புதியது பழையவை