மாவிலாறு பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை விமானப்படை இன்று (30/11/2025) பல்வேறு வகை விமானங்களை உடனடியாக களமிறக்கியுள்ளது.
இதற்காக பெல்–412 ஹெலிகாப்டர், ஜெட் ரேஞ்சர் (206) ஹெலிகாப்டர், KA 360ER கண்காணிப்பு விமானம் மற்றும் MI-17 ரக ஹெலிகாப்டர் ஆகியவை முழுமையான மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.