தமிழர் தலைநகரில், சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி.!

கொட்டும் அடைமழைக்கு மத்தியில் தமிழர் தலைநகரம் திருகோணமலையில், சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சி.சிறீதரன், மாவீரர்களின் குடும்பங்களின் உறவினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சகிதம் சென்று இன்று மாவீரர்களின் நினைவுச் சின்னத்திற்கு சுடரேற்றி, மலர்அஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்தினார்.

அத்தோடு மாவீரர் நாளின் இறுதிநாள் நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
புதியது பழையவை