மக்களின் அனுமதி இல்லாமல் காற்றாலை திட்டத்தை முன்னகர்த்த வேண்டாம் - ஜனாதிபதி அநுர தெரிவிப்பு..!

மன்னார் மக்களின் அனுமதி இல்லாமல் காற்றாலை கருத்திட்டத்தை முன்னகர்த்த வேண்டாம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

காற்றாலை கருத்திட்டம் காரணமாக எழுந்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் எழுப்பிய விடயங்களைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவையின் ஒப்புதலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வள திட்டத்தின்படி, மன்னாரில் மூன்று காற்றாலை திட்டங்கள் கடந்த காலத்தில் திட்டமிடப்பட்டன.

இதில் தம்பபவனி காற்றாலை திட்ட நடவடிக்கைகள் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.

மேலும் இரண்டு காற்றாலை திட்டங்கள் முறையே டிசம்பர் 2025 மற்றும் டிசம்பர் 2026 இல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையிலேயே இதற்கு எதிரான மற்றும் ஆதரவான கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்து எழுந்துள்ளதால், மக்கள் மத்தியில் இருந்து இத்திட்டத்திற்கு எதிராக எழுந்த கருத்துக்கள் தொடர்பில் ஆராயுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதியது பழையவை