வவுனியா தோணிக்கல் பகுதியிலுள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையின் இரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திலுள்ள அமைத்துள்ள பிள்ளையார் சிலையானது வழமையாக மூடிய நிலையிலுள்ள கண்களையுடைய சிலையாகவே காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று(14.11.2025)மாலை நேரம் திடீரென அந்த சிலையிலுள்ள இரு கண்களும் திறந்த நிலையில் மனித கண்களை ஒத்த நிலையில் தென்பட்டு காணப்படுகின்றது.
இதனை பிரதேசவாசிகள் அதிசயத்துடனும், பக்தி பரவசத்துடனும் பார்த்து வருகின்றனர்.