மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் கைது.!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது இலட்சம் பெறுமதியான , 350கிரான் தங்க நகை, காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி வழக்கு சான்று பொருள் பொறுப்பாளர் நேற்றைய தினம் (20.11.2025) களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் இன்றைய தினம் (21.11.2025) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை