மட்டக்களப்பு மாவட்ட செயலாளரின் அவசர அறிவித்தல்.!

வங்களாவிரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் பதினான்கு பிரதேச செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

வளிமண்டளவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலுக்கு அமைவாக கிழக்கு மாகணத்தின் பல பகுதிகளிலும் நாளை (25.11.2025) தொடக்கம் (28.11.2025)ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி கிடைக்ககூடியதாகவும் மேலும் காற்றின் வேகமானது மணிக்கு 50 கிமீ தொடக்கம் 60 கிமீ வரை வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இடையிடையே மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றது.

மேலும், தற்போது க.பொ.த உயர்தரபரீட்சையும் இடம்பெறுகின்றமையால் தங்களது தயார்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்புக்களை முன்னெடுக்குமாறும் விரைவாக  நடவடிக்கைகள மேற்கொள்ளுமாறும் அடுத்தடுத்து வரும் வானிலை அறிக்கை தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறும் பிரதேச செலாளர்களை மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதியது பழையவை