தென் மாகாண ஆளுநர் காலமானார்.

தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாக 62 வயதில் இன்று(16.11.2025)காலமானார்.

நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 

இவர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.அத்துடன், அவர் அமைச்சுச் செயலாளர், மாவட்டச் செயலாளர் மற்றும் பல அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகள் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.
புதியது பழையவை