மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்ப தேற்றாத்தீவு பகுதியில் நேற்றிரவு (23.11.2025)
10,மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கல்முனை பகுதியிலிருந்து மட்டு கல்முனை சாலை வழியே பயணித்த கார் தேற்றாத்தீவு பகுதியூடாக பயணிக்கும் போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமிருந்த சிறிய கோயில் (காளி அம்மன்) மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து சம்பவத்தில் தெய்வாதீனமா எவருக்கும் காயம் ஏற்ப்படவில்லை என்பதுடன் காருக்கும் கோயிலுக்கும் சிறு சேதம் ஏற்ப்பட்டுள்ளது.