போரதீவுப்பற்று பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று(30.12.2025)ஆம் திகதி  நிறைவேற்றப்பட்டது.

2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஆனது (22.12.2025)ஆம் திகதி  முதலாவது முறையாக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் பெரும்பாண்மை நிரூபிக்கப்படாமையினால் பாதீடானது இன்று (30.12.2025)ஆம் திகதி  இரண்டாவது தடவையாக சபைக்கு  சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஆதரவாக இலங்கை தமிழரசு கட்சியின் எட்டு பேரும், எதிராக கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் ஐந்து  பேரும், தேசிய மக்கள் சக்தியின் மூன்று பேர் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தனர்.

இன் நிலையில்
பெரும்பாண்மை கிடைக்காமையினால் இச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026ம்  ஆண்டிற்கான வரவு செலவு திட்டமானது, 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 169ம் பிரிவுக்கு அமைய சபையினால் இவ் வரவு செலவுத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்படுவதாக பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் குறித்த அறிவிப்பினை செய்த நிலையில் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதியது பழையவை