டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணி நேர தடுப்புக்காவல் - நீதிமன்றம் அதிரடி.!

கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (27.12.2025) கம்பஹா நீதிவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.


திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, கம்பஹா - வெலிவேரிய பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை