இலங்கையின் சிங்கள இசை வரலாற்றில் ‘இசைக்குயில்’ என்று போற்றப்படும் லதா வல்பொல தமது 91 ஆவது வயதில் இன்று (27.12.2025)காலமானார்.
இவர் சுமார் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக சிங்களத் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு சிரேஷ்ட பின்னணிப் பாடகி ஆவார்.
1934 ஆம் ஆண்டு பிறந்த இவர், தேவாலய இசைக் குழுக்களில் தனது இசைப் பயணத்தை ஆரம்பித்து, பின்னர் வானொலி மற்றும் திரைத்துறையில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தார்.1952 ஆம் ஆண்டு ‘எதா ரே’ திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமான இவர், இதுவரை 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான ‘சரஸவிய’ விருதுகள் உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச கௌரவங்களைப் பெற்றுள்ளார்.