மஹியங்கனையில் இடம்பெற்ற மின் துண்டிப்பினால் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மின் துண்டிப்பு இடம் பெற்று வருவது யாவரும் அறிந்ததே.
தற்போது மின்சாரத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை மின்சார சபையே மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று (30.11.2025) இடம்பெற்ற கள ஆய்வுக்குப் பிறகு, ரந்தம்பே – மஹியங்கனை பாதையில் தற்காலிக கோபுரங்களை அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டு கோபுரங்கள் அமைப்பதற்கான முக்கிய பாகங்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, அவற்றை பொருத்தும் வேலைகள் நாளை (01) ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளது.