கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு.!

மதவாச்சி - உடும்புகலவத்த பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (27.12.2025) பதிவாகியுள்ளது.

கட்டுத்துவக்கு வெடித்ததில் காயமடைந்த குறித்த நபர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை