மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்தியரின் ஐபோனை திருடியவர் கைது.!

மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியரொருவரின் மூன்றரை இலட்சம் பெறுமதியான IPhone 15 Pro கைத்தொலைபேசியை களவாடிய சந்தேகத்தின் பேரின் ஏறாவூர் பிரதேசத்தைச்சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று (27.12.2025) கைது செய்துள்ளதுடன், சந்தேக நபரிடமிருந்து கைத்தொலைபேசியையும் மீட்டெடுள்ளனர். 

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஜே.எச்.பி.சஜீவ சம்பத் குமாரவின் உத்தரவுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவும் குற்றத்தடுப்புப்பிரிவினரும் இணைந்து பிரிவுப்பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கே.எஸ்.பி.அசங்க தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான 39210-வீரசிங்க, 8656-தினேஷ், 92658-அக்ரம், 40258-றிஷோ மற்றும் விஷேட பிரிவைச்சேர்ந்த பயாஸ், விஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் குறித்த கைது நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். 

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

புதியது பழையவை