மட்டக்களப்பு வாகனேரியில் கிணறுகள் சுத்திகரிக்கும் பணியில் இராணுவத்தினர்.!

மட்டக்களப்பு வாகனேரியில் அனர்த்தத்தினால் அசுத்தமான கிணறுகள்  இராணுவத்தின் உதவியுடன் சுத்திகரிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வாகனேரி கிராமத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிணறுகளை தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் இளையதம்பி பார்த்தீபனின் வேண்டுகோளுக்கமைவாக தேசிய மக்கள் சக்தியின் பிரதேச நிறைவேற்றுக்குழுவின் ஏற்பாட்டில் இன்று (10.12.2025) புதன்கிழமை சுத்திகரிக்கப்பட்டன.

கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் ஏ.தாஹிர்  மற்றும் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ் ஆகியோர்களின் வழிகாட்டலில், நாவலடி இராணுவ முகாம் வீரர்களின் ஒத்துழைப்புடன் குறித்த கிணறுகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை