மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி தளவாய் பிரதேசத்தில் சூறாவளி மற்றும் கடல் சீற்றத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த தமிழ், முஸ்லீம், சிங்களம் என மூவினத்தைச் சேர்ந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகள் நேற்று(09.12.2025) வழங்கி வைக்கப்பட்டன.
சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய பிரான்ஸ் துளிர் அமைப்பின் ஊடாக மேற்படி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது தளவாய் கிராமத்தில் உள்ள மூவினத்தைச் சேர்ந்த 115 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.